“அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் மக்களே” வேண்டுகோள் விடுக்கும் பிரதமர்

ஐரோப்பிய நாடுகளான நார்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சமீப ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மக்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் மக்களே” வேண்டுகோள் விடுக்கும் பிரதமர்

ஐரோப்பிய நாடுகளான நார்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சமீப ஆண்டுகளாக குறைந்து வருகிறது. பொதுவாகவே அங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதால், குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.

இந்நிலையில், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், “நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்” என்று கூறி உள்ளார்.

மேலும் “இனி வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் (பிறப்பு வீதம் குறைவாக இருந்தால்) நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments