இனி வாட்ஸ்ஆப்பில் உங்களால் இதைச் செய்யவே முடியாது?

இந்தப் புதிய விதிகள் இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் செயல்படுத்த உள்ளதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் பயனர்கள் புகைப்படம், தகவல், வீடியோ போன்றவற்றைப் பகிர்வதை அதிகம் விரும்புவார்கள். ஆனால் இதற்கு வாட்ஸ்ஆப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் குறித்து வாட்ஸ்ஆப் தங்களது பிளாகில் இனி ஒரு நேரத்தில் ஒரு தகவலை 5 நபர்களுக்குக் கூடுதலாகப் பகிர முடியாது என்று தெரிவித்துள்ளது. அதே நேரம் தனிப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடுவதில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இனி வாட்ஸ்ஆப்பில் உங்களால் இதைச் செய்யவே முடியாது?
கடந்த 6 மாதங்களாக வாட்ஸ்ஆப் நிறுவனம் போலி செய்திகள் பரவுவதைக் குறைக்கச் சோதனை முயற்சியில் சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தச் சோதனை முயற்சியில் பயனர்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு 5 நபர்களுக்கு மட்டுமே ஒரு தகவலை பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை அமலுக்குக் கொண்டு வருகிறோம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

சோதனை முயற்சியின் போது வாட்ஸ்ஆப்பில் 25 சதவீதம் வரை ஒரு தகவல்களை ஃபார்வர்டு செய்வது குறைந்துள்ளது என்றும் பிடிஐக்கு அளித்த பேட்டியில் வாட்ஸ்ஆப் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சமுக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் போலி செய்திகளைப் பரவுவதைத் தடுக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற சேவை வழங்கும் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு நெருக்கடியை அளித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கப் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியை 200 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய அரசு சமுக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகளைக் கண்டறிய நிறுவனங்கள் குழு அமைக்க வேண்டும். போலி செய்தி என்று உறுதி செய்யப்பட்ட உடன் அதை நீக்க வேண்டும். யார் அந்தச் செய்தியை பதிவேற்றினார்கள் என்ற விவரங்களையும் விசாரணைக்காகச் சேமித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொலைக்காட்சி, செய்தித்தாள், ரேடியோ மூலம் சமுக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள உள்ளது.

இந்தப் புதிய விதிகள் இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் செயல்படுத்த உள்ளதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments