சோறு, இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு இந்த சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இதை அரைச்சு விட்ட சாம்பார் அல்லது இடிச்ச சாம்பார் என்றும் கூறுவார்கள். இது பாரம்பரிய வழக்கப்படி கையிலேயே மசாலாக்களை இடித்து , அரைத்து சமைப்பதால் இப்படி அழைப்பதுண்டு. சோறு, இட்லி, தோசை போன்று உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்களும் சமைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/3 கப்
புளி - எலுமிச்சை அளவு
சாம்பர் வெங்காயம் - 10 - 12
காய்கறிகள் - உங்கள் விருப்பம் (முருங்கை,கத்தரிக்காய், கேரட், பீன்ஸ்...)
மஞ்சள் பொடி - 1/4 tps
உப்பு - தேவையான அளவு
வறுக்க தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/3 கப்
புளி - எலுமிச்சை அளவு
சாம்பர் வெங்காயம் - 10 - 12
காய்கறிகள் - உங்கள் விருப்பம் (முருங்கை,கத்தரிக்காய், கேரட், பீன்ஸ்...)
மஞ்சள் பொடி - 1/4 tps
உப்பு - தேவையான அளவு
வறுக்க தேவையான பொருட்கள்
தனியா - 1 tps
கடலை பருப்பு - 2 tps
காய்ந்த மிளகாய் - 4
வெந்தையம் - 1/8 tps
துருவிய தேங்காய் - 1 tps
கடலை பருப்பு - 2 tps
காய்ந்த மிளகாய் - 4
வெந்தையம் - 1/8 tps
துருவிய தேங்காய் - 1 tps
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் அல்லது நெய் - 1 tps
கடுகு - 1/4 tps
வெந்தையம் - 1/8 tps
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - 5 இலைகள்
சமையலுக்கு முன் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியவை
எண்ணெய் அல்லது நெய் - 1 tps
கடுகு - 1/4 tps
வெந்தையம் - 1/8 tps
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - 5 இலைகள்
சமையலுக்கு முன் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியவை
- புளியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். பின் புளிக்கரைசலை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- காய்கறிகளை சம அளவில் தேவைக்கு ஏற்ப நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- குக்கரில் துவரம் பருப்பு மைய மசியுமாறு 5 விசில் வரை விட்டு இறக்கவும்.
- கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டிவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
- செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும். அடுத்ததாக வெந்தையம் , பெருங்காயப் பொடி, கருவேப்பிலை சேர்க்கவும்.
- அடுத்ததாக தோல் உறித்த சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின் புளிக் கரைசல், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். அதில் காய்கறிகள் வேகும் வரைக் கொதிக்க விடவும்.
- காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, மிக்ஸியில் அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலக்கி விடவும். அதோடு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- சிறு தீவில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொஞ்சம் கெட்டியான பதம் வந்ததும் சாம்பாரை இறக்கி விடவும். சாம்பார் அதிக கட்டியாகவும் இருக்கக் கூடாது.
0 Comments