தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனத்தில் 150 இன்ஜினியர்கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-இல் மேனேஜ்மென்ட் ட்ரெய்னி (டெலிகாம் ஆபரேஷன்) பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன.
கல்வித் தகுதி: டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜனவரி 26. மேலும் விவரங்களுக்கு http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.
0 Comments