விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு கடலோரக் காவல் படையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல் படை (Indian Coast Guard) ஆயுத படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். இதில் நேவிக் (ஜெனரல் டியூட்டி) – 02/2019 பயிற்சியின் கீழ் பிளஸ் 2 முடித்தவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்தியக் குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பை 10+2 முறையில் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.
தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் உரிய பயிற்சிக்குப் பின் பணியில் அமர்த்தப்படுவர்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31. மேலும் விவரங்களுக்கு, https://static.tamil.news18.com/tamil/uploads/2019/01/Notification-Indian-Coast-Guard-Navik-GD-02-2019.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்
0 Comments