ரயில்வேயில் காலியாக உள்ள 12,844 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள்!

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

ரயில்வேயில் காலியாக உள்ள 12,844 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள்!
ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) விண்ணப்பங்களை கோரி உள்ளது.

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 13,487. இதில் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு 12,844 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜூனியர் இன்ஜினியர் (ஐ.டி.) பணிக்கு 29 இடங்களும், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட் பணிக்கு 227 இடங்களும், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டென்ட் பணிக்கு 387 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: பட்டதாரி இன்ஜினியர்கள் மற்றும் டிப்ளமா இன்ஜினியர்கள் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கும், இயற்பியல், வேதியியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டென்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31. மேலும் விவரங்களுக்கு,  http://www.rrbbpl.nic.in/RRBs%20-%20JE%20Centralized%20Employment%20Notice%20No.03-2018.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.

Post a Comment

0 Comments