விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு மட்டும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தில் அசிஸ்டென்ட் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டென்ட், டெக்னிகல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பிரிவு வாரியாக: இந்த 309 பணியிடங்களில் ஜூனியர் டெக்னிகல் அசிஸ்டென்ட் பணிக்கு 131 இடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 31 இடங்களும், அசிஸ்டென்ட் டெக்னீசியன் பணிக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்கள் வேறு பிரிவுகளில் உள்ளன.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு மட்டும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர்கள், ஐடிஐ படித்தவர்கள், டிப்ளமோ இன்ஜினியர்கள், பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட பணியிடங்கள் உண்டு. அந்தந்த பணிக்குரிய கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை விளம்பர அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 27. மேலும் விவரங்களுக்கு https://ongcindia.com என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
0 Comments