நகைச்சுவை செய்வது தன் துணையை ஈர்க்கும் காரணியாக இருக்கிறது. இதனால் உறவில் ரொமான்ஸ் அதிகரிக்கும்.
காதலர்கள் தங்களுக்குள் நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொள்வது அன்யோன்ய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே உங்கள் துணையை நீங்கள் எப்போதும் கிண்டல் செய்யும் நபராக இருந்தால் அதைத் தொடருங்கள்.
இப்படி ஒருவரையொருவர் நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொள்வதால் அந்த பந்தம் நீண்டநாள் தொடரும் என்றும் கூறியுள்ளது. அந்தக் கிண்டல் பேச்சுகள் உங்கள் துணையை மனதளவில் புண்படாதவாறு இருக்கும்பட்சத்தில் அது ஆரோக்கியமான உறவிற்கு வித்தாகும். இல்லையெனில் முறிவிற்கு இட்டுச் செல்லும் என்கிறது அந்த ஆய்வு.
ஒருவரையொருவர் நகைத்துக் கொண்டு வாய்விட்டுச் சிரிப்பதால் இருவருக்குள் சண்டைகள் அதிகம் வராது. இதனால் தங்களுக்குள் இருக்கு பிரச்சனைகளும் மறைந்துபோகும். சண்டைகள் வந்தாலும் உங்களின் ஒரு காமெடியில் எல்லா கோபங்களையும் பொசுக்கிவிடலாம்.
உங்கள் பிரிவுகளின்போதும் உங்களுக்குள் நீங்கள் செய்துகொண்ட காமெடிகள், கிண்டல்கள் நினைவுகளால் வதைத்து மீண்டும் இணைத்துவிடும். தொலைதூரம் சென்றாலும் நீண்ட நாள் இருக்க விடாது, பிரிவின் தாக்கம் அதிகமாக இருக்கும், இது உங்களை சக வாழ்க்கையிலிருந்து விலக வைக்கும் உள்ளிட்ட காரணங்களை ஜர்னல் பர்ஸ்னல் ரிலேஷன்ஷிப் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவில் விளக்கியுள்ளது.

அதேபோல் நகைச்சுவை செய்வது தன் துணையை ஈர்க்கும் காரணியாக இருக்கிறது. இதனால் உறவில் ரொமான்ஸ் அதிகரிக்கும் என இந்த ஆய்வின் தலைவராக செயல்பட்ட ஜெஃப்ரி ஹால் கூறியுள்ளார். இவர் அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.
இந்த ஆய்வில் 1,50,000 பேரிடம் ‘ரொமான்டிக்கான வாழ்க்கைக்கு நகைச்சுவை எந்த அளவிற்கு முக்கியம்? ‘ என்கிற கேள்வியை முன்வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது. பலரும் நகைச்சுவையான பரிமாற்றங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாகக் கூறியுள்ளனர்.
பலர் முன் வெளிப்படையாக கிண்டல் செய்வதைக் காட்டிலும் இருவருக்குள்ளும் செய்து கொள்ளும் கிண்டல் மற்றும் நகைச்சுவைகளுக்குத்தான் சக்தி அதிகமாக இருப்பதாக ஜெஃப்ரி கூறுகிறார். ஆனால் அது அவர்களை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் அவர் எச்சரிக்கிறார். சிலர் நகைச்சுவை என்கிற பெயரில் அவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டுவது, தோற்றத்தைக் கிண்டல் செய்வது என மனதை காயப்படுத்தும் செயல்களைச் செய்வார்கள். அவ்வாறு செய்வதால் உங்கள் மேல் வெறுப்பை வளர்க்குமே தவிர காதல் அதிகரிக்காது என்கிறார் ஜெஃப்ரி.

0 Comments