தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா? இதைப் படிங்க

போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் ஜனவரி 29 காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக ரூ. 10,000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை - ஜனவரி 29) காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக கருதப்பட்டு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து ஓரு மாத காலத்திற்கு மட்டும் முற்றிலும் தற்காலிகமாக ரூ.10,000 தொகுப்பூதியத்தில் கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிறுத்தியுள்ளார்.

1) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்

2) அந்தந்த பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்தலாம்
3) மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்த முன்னுரிமை வழங்க வேண்டும்

4) உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பணியமர்த்தும் ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர் இசைவுடம் வழங்க வேண்டும்

5) பணியமர்த்தும் ஆணையில் முற்றிலும் தர்காலிக அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ரூபாய் 10,000 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என்ற விவரம் குறிப்பிடப்பட வேண்டும்

6) மேலும் இதனைக் கொண்டு அரசின் வேலைவாய்ப்பிற்கு எத்தகைய உரிமையும்/முன்னுரிமையும் கோர முடியாது என்ற விவரமும் குறிப்பிடப்பட வேண்டும்

Post a Comment

0 Comments