#NZvIND: 10 ஆண்டுகளுக்குப்பின் நியூசி. மண்ணில் இந்தியா சாதனை!

#IndianTeam Won ODI Series Against New Zealand | 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது. #NZvIND #TeamIndia

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, ராஸ் டெய்லர் 93 ரன்கள் எடுத்தும், லாதம் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்
Virat Kohli, Chahal, விராட் கோலி, சாஹல்
இந்திய அணி சார்பில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.

ரோகித் சர்மா தனது 39-வது ஒரு நாள் அரை சத்தையும், விராட் கோலி தனது 49-வது ஒரு நாள் அரை சத்தையும் அடித்தனர். ரோகித் 62 ரன்களிலும், கோலி 60 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், களமிறங்கிய அம்பதி ராயுடு (40), தினேஷ் கார்த்திக் (38) ஜோடி நேர்த்தியாக விளையாடியதால், 43 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
Taylor, Latham, ராஸ் டெய்லர், டாம் லாதம்
முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது.
Dinesh Karthick, Ambati Rayudu, தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு

Post a Comment

0 Comments